கேரட் பயன்கள்

கேரட் பயன்கள்

கேரட் பயன்கள்

🥕🥕🥕கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. அவை இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன், கண் பார்வையை கூர்மையாக்குகிறது. அதுமட்டும் அல்ல, உடலில் உள்ள எலும்புகளையும் உறுதியாக்கிக்குறது.

கேரட் பயன்கள்
  1. கண்களைக் கவரும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் கேரட், பார்ப்பதற்கு மட்டுமல்ல வெறுமனையாக சாப்பிடுவதற்கும் சிறந்தது. இது, சுவைக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்தது. இது உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண்பார்வையை பெறுவது வரை எக்கச்சக்கமான சத்துக்களை வழங்குகிறது.
  2. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
  3. அதில், உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஏனென்றால், சர்க்கரை அளவை கேரட் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதில், உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய செல்களை உருவாக்குகிறது.
  4. இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும் இதயப் பிரச்சினைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். இதனால், எளிமையாக உடல் எடையை குறைக்கலாம்.
  5. புற்றுநோய் பாதிப்புகுறைவு புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது
  6. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். கேரட்டில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இவை, உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.
  7. கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.
  8. தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது.கேரட்டை பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.
  9. வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.
  10. கேரட்டை வேக வைப்பதன் மூலம் அதன் கடினமான சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோட்டின் வெளிவருகிறது. கேரட்டை சமைக்கும் போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் அதன் மொத்த சத்தையும் உடல் நன்றாக எடுத்து கொள்ளும்.

கேரட் பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்