கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி!

கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கிராண்ட்பாஸில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது

இத்தாக்குதலில் ஆணொருவரும் பெண்ணொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் காயமடைந்த மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண் 60 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் முகத்துவாரம் உயன அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 26 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க