குபேரன் பொம்மை எந்த திசையில் வைக்க வேண்டும்

குபேரன் பொம்மை எந்த திசையில் வைக்க வேண்டும்

குபேரன் பொம்மை எந்த திசையில் வைக்க வேண்டும்

🟧சிலரது வீடுகளில் அலங்கார பொருட்களின் ஒரு அங்கமாக குபேர பொம்மை விளங்குகிறது. இன்னும் சிலரது வீடுகளில் இந்த பொம்மை பூஜை அறையில் காணப்படுகிறது. புத்த மதத்தை சார்ந்தவர்கள் கடவுளாக வணங்கும் இந்த பொம்மையின் உண்மை பெயர் சிரிக்கும் புத்தர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.

🟧வீட்டின் கிழக்கு திசைதான் குடும்பத்தின் அதிர்ஷ்டபுள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேரபொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

🟧கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும்  மனகஷ்டம் தீரும்.

🟧கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க் கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள்  கொண்டு வரும்.

🟧குபேர பொம்மையை அறை ஹால் படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண் டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.

🟧சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும்போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர் நோக்குவதற்கு புது நம்பிக்கை  நமக்கு கிடைக்கும்.

🟧சிவனை வட திசை நோக்கி வழிபட்டவர் குபேரர். மேலும் வெங்கடேச பெருமாளுக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்ற நம்பிக்கை நம்பிக்கையும் உண்டு. இப்படிப்பட்ட குபேரரை நம் வீட்டில் வடகிழக்கு திசையில் வைத்து வணங்கினால் மிகவும் சிறந்தது என்பது ஐதீகம். அவ்வாறு செய்தால் வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கும். சந்தோஷம் நிலவும். செல்வம் அதிகரிக்கும். மேலும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

🟧வேலை செய்யும் இடத்தில் மேசையின் மீது வைத்தால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் சண்டை, சச்சரவு ஏற்படாது.

🟧மாணவர்கள் படிக்கும் மேசையில் மீது குபேர பொம்மையை வைத்தால் கல்விதிறன் உயர்வடையும்இ கவனச்சிதறல் ஏற்படாது.

🟧புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவுபடுத்தவோ அவமதிக்கவோகூடாது.

குபேரன் பொம்மை எந்த திசையில் வைக்க வேண்டும்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்