-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 50க்கு மேற்பட்ட தென்னைமரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளது.
இரணைமடு காட்டுப்பகுதியில் நிற்கும் காட்டு யானைகள் இவ்வாறு வட்டக்கச்சி கட்சன் வீதியில் உள்ள மக்களின் குடியிருப்புக்குள் இரவு நுழைந்து பயன்தரும் தென்னை மரங்களை அடியோடு அழித்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள மூவரது காணிக்குள் நுழைந்த காட்டு யானைகளே இவ்வாறு அழிவினை ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
1993ம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறு குறித்த காணியில் மூவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்ததாகவும், கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் ஒருவர் காயமடைந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்றுமுதல் இன்றுவரை தாம் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளாவதாகவும், அப்பகுதியில் காட்டு யானைகள் உள் நுழையாத வகையில் பாதுகாப்பு வேலிகளை அமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்கொள்வதால் தெங்கு செய்கையை கைவிடும் மன நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த தென்னைகளை நீர் இல்லாத நிலையில் கையினால் ஊற்றி வளர்த்ததாகவும், தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருவதால் மிகுந்த கவலை அடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையான தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும், தமது அழிவினை சீர் செய்வதற்கான நட்டயீட்டினை பெற்றுத்தருவதற்கு முன்வர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்