குடிநீருக்காக கஷ்டப்படும் சின்னக்குளம் கிராம மக்கள்

-மூதூர் நிருபர்-

மூதூர் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த சின்னக்குளம் கிராம மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமையால் சிக்கல்களை எதிர் நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமத்தில் தற்போது 169 குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். எனினும் இக்கிராமத்தில் சுத்தமான குடிநீர் வசதி கிடையாது.

மூதூர் பிரதேச சபையினால் வாரத்தில் ஒரு தடவை குடிநீர் வழங்கப்படுவதாகவும் அது பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

வறட்சியால் தற்போது கிணறுகளில் நீர் வற்றிப் போய் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை எனவும் சுத்தமான குடிநீர் இல்லாமையால் சின்னக்குளம் கிராமத்தில் பலர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அரசியல்வாதிகளிடமும் அரச அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பல்வேறு தடவைகள் அறிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தமது கிராமத்திற்கான குடிநீர் வசதியினை ஏற்படுத்தித் தருமாறு மூதூர் சின்னகுளம் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்