கிழக்கு மாகாணப் பிரச்சினைகளை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

-மட்டக்களப்பு நிருபர்-

தேர்தல் விஞ்ஞாபனங்கள் தேசிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளாமை சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண பிரச்சினைகளை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனம் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி தலைமையில் இடம்பெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு நிகழ்வில் வளவாளராக சட்டத்தரணி அசாத் முஸ்தபா கலந்து கொண்டார்.