கிழக்கு பொது நூலகங்களில் கணனி மயமாக்கல் செயற்றிட்டம் ஆரம்பம்
-கிண்ணியா நிருபர்-
UNDP நிறுவனமும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையும் இனைந்து கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட முக்கிய பொது நூலகங்களை கணனி மயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சி 8.05.2023 தொடக்கம் 10.05.2023 வரை திருகோணமலை முகாமைத்துவப் பயிற்சி பிரிவில் நடைபெற்றது இதில் 45 வரையான நூலகர்கள் மற்றும் நூலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பேராசிரியர் நந்த தர்மரத்தின, பணிப்பாளர் வடுகே, உதவிப்பணிப்பாளர் அரவிந்த, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்