
நாளை மலரவுள்ள நத்தார் பண்டிகையினை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று ஹட்டன் பிரதான நகரில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் பொருட்களை கொள்வனவு செய்ததை காணமுடிந்தது.
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் இடம்பெற உள்ளது.
நத்தார் ஆராதனையை முன்னிட்டு ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் உள்ள தேவாலயத்தில் விசேட பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
