கிராமத்திற்குள் புகுந்த முதலை

-மூதூர் நிருபர்-

மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று சனிக்கிழமை அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது.

இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டது.

இம்முதலை கிராமத்திற்குள் உட்புகுந்ததையடுத்து கிராம மக்கள் பிடித்து முதலையை கட்டிப் போட்டிருந்தனர்.

அதை வேளை கந்தளாய் வனஜீவராசிகள் திணைகள அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் வழங்கியதையடுத்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று பகல் அம்முதலையினை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்