காளி கோவிலில் ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு

-யாழ் நிருபர்-

 

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகை திருடப்பட்டுள்ளதோடு,  ஆலய வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ஒரு தொகை பணமும் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

இன்று புதன்கிழமை காலை 7 மணி அளவில் ஆலய பூசகர் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முற்பட்ட போதே குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரிய வந்ததாக ஆலய பூசகர் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க