
காலி முகத்திடல் போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ரிஷாட் பதியுதீன் குழுவினருடன் சந்திப்பு
-மன்னார் நிருபர்-
காலி முகத்திடல் ‘அரகலய’ போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று திங்கட்கிழமை கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, எதிர்வரும் புதன்கிழமை புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில், ‘அரகலய’ பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்துடன், அவர்கள் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் தமது கருத்துக்களையும், தாம் கொண்டிருக்கும் திட்டங்களையும் வெளிப்படுத்தியதோடு, அது தொடர்பான ஆவணத்தையும் கையளித்தனர்.
தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளுடன் ‘அரகலய’ போராட்டக் குழுவினர் நடாத்தி வரும் பேச்சு வார்த்தையின் ஒரு கட்டமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது.