காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் – சஜித் பிரேமதாச சந்திப்பு

காலி முகத்திடல் போராட்டக்கள பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதி இந்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில்  போராட்டக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் தமது நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி முகத்திடல் போராட்டகள பிரதிநிதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க