காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் அறிவித்தல்

காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் அறிவித்தல்

-யாழ் நிருபர்-

காரைநகர் பிரதேசத்தில் வெளியிடங்களில் இருந்து வர்த்தக நடவடிக்கைக்கு வருவோராலேயே திருட்டுச் சம்பவங்கள் இடம் பெறுவதாக, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக, காரைநகர் பிரதேசத்தில் இருந்து வெளியே செல்லும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் பிரதேச செயலரின் ஒத்துழைப்புடன் கடற்படையினரால் பரிசோதனை செய்யப்படுகிறது.

காரைநகர் பிரதேசத்தில் அண்மைய நாட்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது.

இவ்வாறான திருட்டு சம்பவங்கள் வெளியிடங்களில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காக, காரைநகர் பிரதேசத்திற்குள் வருவோரால் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது.

அதாவது பழைய இரும்பு பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்க வருவோரால் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் முன்னெடுக்கப்பட கூடும்.

எனவே, இதனை தடுக்கும் முகமாக காரைநகர் பிரதேசத்துக்குள் வியாபார நடவடிக்கைகளுக்கு வருவோர், காரை நகர் பிரதேச சபையினரிடம் உரிய அனுமதியை பெற்று,

அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னரே வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்ற நடைமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் காரைநகர் கசூரினா கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணியுடன் மது போதையில் தவறாக நடந்து கொண்டமை தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த சம்பவமானது காரைநகர் பிரதேச சபையினால் தடை செய்யப்பட்டுள்ள கோவளம் கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கசூரினா கடற்கரை பகுதியானது ஒரு சுற்றுலாத்தளமாக காரைநகர் பிரதேச சபையின் மேற்பார்வையின் கீழ் குறித்த பகுதியானது பாதுகாப்பு மற்றும் சகல வசதிகளுடனும் சிறப்பாக சுற்றுலா நடவடிக்கைக்குஎன ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இவ்வாறான ஒரு இழிவான செயல் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆனால், கோவளம் கடற்கரை பகுதி பிரதேச சபையினரால் அவ்விடத்திற்கு செல்வதோ அல்லது குளிப்பதற்கோ தடை செய்யப்பட்ட பகுதியிலே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஒரு மன வருத்தத்துக்குரிய விடயமாகும்

இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற் படையினர் மற்றும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறா வண்ணம் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை பிரதேச சபை தவிசாளர் என்ற ரீதியில் முன்னெடுத்துள்ளேன்.

பத்திரிகைகளில் குறித்த சம்பவமானதுகசூரினா கடற்கரையில் இடம் பெற்றதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் குறித்த சம்பவமானது கோவளம் கடற்கரை பகுதியில் இடம்பெற்றதாகவும்,

பொலிசாரின் பிரசன்னமோ கடற்கரையினரின் பிரசன்னமோ அவ்விடத்தில் காணப்படுவதில்லை.

இதன் காரணமாகவே மது போதையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களால் குறித்த சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.