காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய நூலக திறப்பு விழா

-அம்பாறை நிருபர்-

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் அனுசரணையில் விஸ்தரிக்கப்பட்ட நூலகம் பாடசாலை பிரதி அதிபர் எம்.வை.எம் யூசுப் இம்றானின் ஒருங்கிணைப்பில் அதிபர் எஸ்.எல்.ஏ கபூர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியான காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் ஜே.பி கலந்து கொண்டு புதிய நூலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக காத்தான்குடி நகரசபை செயலாளர் எம்.ஆர்.எப் றிப்கா சபீன் விஷேட அதிதிகளாக மௌலவி எம்.ஐ ஆதம்லெவ்வே பலாஹி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் நூலகத் திறப்பு விழாவிற்கு காத்தான்குடி நகர சபையினால் சுமார் 1300 க்கும் மேற்பட்ட புத்தகங்களும், உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க