
காணாமல் போன மாணவனின் உடல் கரையொதுங்கியுள்ளது
-அம்பாறை நிருபர்-
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
மேலும் காணாமல் போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று சனிக்கிழமை காலை ஒலுவில் பகுதியில் கரையோதுங்கியுள்ளது.மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை ஏனைய ஆறு மாணவர்களிடம் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களுக்கு 👇👇👇👇👇👇
சாய்ந்தமருது பகுதியில் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


