கல்முனை ஹுதா பள்ளிவாசலில் இரத்ததான முகாம்

-கல்முனை நிருபர்-

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவாக்குழுவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் எதிர்வரும் 28 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் பள்ளிவாசல் தலைவர் ஏ.வி.எம். இப்றாஹீம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் பொருட்டே நிர்வாகத்தினர் மற்றும் தஃவாக் குழுவினரின் முழுமையான பங்களிப்புடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்விற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர், கல்முனை இராணுவ படை முகாம் 18வது விஜயபாகு பாபல ரஜிமேந்து அதிகாரி கொமாண்டர் எஸ். ஆர்.கே.டி.சிறிசேன மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் ஏ.எல்.எப்.றஹ்மான் உட்பட உலமாக்கள் பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரத்ததான முகாமில் கல்முனை வாழ் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வர வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுப்பதோடு, மேலதிக விபரங்களைப்பெற தஃவாக்குழுவினரின் 0760123242, 0771336317 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் பெயர் விபரங்களை வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க