
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரும் மக்கள் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற ஒன்று கூடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
அரசாங்கம் தாமதியாது கல்முனை வடக்கு பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியையும், அதிகார அத்துமீறலையும் கண்டித்து மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் ஒரு மாத காலத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
