கல்முனை ஆதார வைத்தியசாலையில் நவபோஷா வழங்கிவைப்பு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நவபோஷா வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர் –

கல்முனை ஆதாரவைத்தியசாலை மற்றும் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித்தாய்மார்கள், ஐந்து வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து  குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான போசாக்கு விருத்திக்கு நவபோஷா சத்துமா பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை ஆதாரவைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம், மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் ஆகியவற்றின் நிதிப்பங்களிப்பில் இவ்சத்துமா பொதிகள் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக பல சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இவ் நவபோஷா சத்துமா பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜெ.மதன், சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் என்.ரமேஸ், குழந்தை நல மருத்துவ நிபுணர் பிறேமினி, மருத்துவமனை நண்பர்கள் ஐக்கியராஜ்ஜியத்தின் இணைப்பாளர் கிறிஸ்ரி உட்பட வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.