விஷம் கொடுத்து பல தெரு நாய்கள் கொலை – கர்ப்பிணி நாய்களும் பலி
குருநாகல் வெவராவ பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்த இரண்டு கர்ப்பிணி நாய்கள் உட்பட எட்டு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் இரண்டு நபர்களைக் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர்வாசிகளால் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் கொல்லப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன் விலங்குகள் நலசங்கங்களும் இதற்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் ஏரிக்கு அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் சகோதரர்கள் என்றும், சட்டவிரோத கால்நடை கடத்தல்காரர்கள் என்றும், சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்து எட்டு நாய்களுக்கும் விஷம் தடவிய மாட்டிறைச்சி துண்டுகளை உணவாகக் கொடுத்ததும், அவற்றை சாப்பிட்ட நாய்கள் இறந்தமையும் சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.
வெவராவ பகுதியில் வசிக்கும் பொது மக்களால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கபட்டு குருநாகல் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.