
தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள். ஆனால் கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை.தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கொடுத்த பதிலடிக்கு பயந்து தான் இந்த தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியினை தமிழரசுக் கட்சி மேற்கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன்.அப்படியாயின் 1994 ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதி நிதித்துவத்தை இழப்பதற்கும் அங்குள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் உள்ள மாவை சேனாதிராஜா தான் காரணம்.இதனை யார் சுட்டிக்காட்டுவது என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகின்றேன், என கல்முனை ஐக்கிய வணிகர் சங்க நிர்வாக உறுப்பினர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பாண்டிரப்பு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
