
கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் மாணவி கட்டுநாயக்கவில் கைது
கனேடியப் பெண் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த ஹஷீஷ் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் 20 வயதுடைய மாணவி என்பதோடு, இவர் இலங்கைக்கு வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
சந்தேக நபர் கொண்டுவந்த பயணப் பொதியில் 3 போர்வைகளில் சுற்றப்பட்ட 175 மில்லியன் ரூபாய் பெறுமதியான 17 கிலோ கிராம் 573 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர் உட்பட அவர் கொண்டு வந்த போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.