கனவில் பாம்பு கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
💛கனவு காண்பதனை வைத்து அவர்களுக்கு அடுத்து என்ன நடக்க போவது என அறிந்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
💛கனவுகளில் சில வகைகள் இருக்கின்றன. அதன் தன்மைக்கேற்ப பயன்களும் மாறுப்படுகின்றன.
அந்த வகையில் கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்பதனை நாம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
1. நிறைய பாம்புகளை காண்பது
நாம் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கும் போது நம் பின்னால் நிறைய பாம்புகள் வந்தால் அவருக்கு சில பிரச்சனைகள் வரப் போகிறது என்று அர்த்தம்.
இவ்வாறு வரும் பாம்புகள் நீங்கள் அடித்து கொன்றாலும் அதனை துறத்தினாலும் அதற்காக நீங்கள் பயம் கொள்ள தேவையில்லை. இது போல்ன கனவு வந்தால் உங்களுக்கு வரவிருக்கும் நெருக்கடியைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
2. இறந்த பாம்பை காண்பது
ஸொப்பன சாஸ்திரத்தின் படி, ஒருவர் கனவில் இறந்த போன பாம்பு வந்தால் இனி வரும் காலங்கள் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று பொருள்படுகின்றது.
இவ்வாறு பாம்பு வந்து அதன் பற்களை காட்டினால் உங்களுடன் நெருக்காமாக இருக்கும் ஒரு சொந்தம் உங்களுக்கு பின்னால் இருந்து துரோகம் செய்து கொண்டிருக்கின்றது என பொருட்படுகின்றது.
3. வெள்ளை அல்லது தங்க நிற பாம்பு காண்பது
தங்க அல்லது வெள்ளை நிற பாம்புகள் கனவில் வந்தால் ஸொப்பன சாஸ்திரத்தின் படி, உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு தடவைக்கு மேல் இந்த பாம்புகளை கனவில் கண்டு கொண்டே இருக்கும் போது உங்களுக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தம் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
4. பாம்பு கடிப்பது போன்ற கனவு காண்பது
ஒருவரை துரத்திக் கொண்டிருக்கும் பாம்பு உங்களை தீண்டி இறந்தால் கஷ்டம் நம்மை விட்டு விலகப் போகிறது என்று அர்த்தம். மேலும் கடனால் தவித்து கொண்டிருப்பவர்கள் இந்த கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவார்கள்.
அதுவும் கனவில் வெள்ளைப் பாம்பு கடித்தால், அது மங்களகரமான விடயம் எனவும் கருதப்படுகின்றது.
5.நல்ல பாம்பு கனவில் வந்தால்
கனவு காண்பவர் அவருடைய கனவில் நல்ல பாம்பு கனவில் தோன்றினால் அவருக்கு விரோதிகளால் மற்றும் எதிரிகளால் பல பிரச்சனைகள் ஏற்பட போகும் தொல்லைகள் வந்து சேரும் என்பதை குறிப்பதற்காகவே நல்ல பாம்பு கனவில் வருகிறது.
6.இரட்டைப் பாம்பு கனவில் வந்தால்
இரட்டைப் பாம்பு கனவில் வந்தால் கூடிய விரைவில் கனவு கண்ட நபருக்கு பலவிதமான நன்மைகள் மற்றும் சந்தோஷமான சூழ்நிலைகள் ஏற்படப் போகிறது என்பதை உணர்த்தவே இரட்டை பாம்பு கனவில் வருகிறது.
7.கனவில் அடிக்கடி பாம்பு வந்தால்
உங்கள் கனவில் அடிக்கடி பாம்புகள் வந்தால் நீங்கள் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் மேலும் ராகு கேது திசைகள் நடைபெற்றாலும் அல்லது ராகு புத்தி கேது புக்தி நடைபெற்றாலும் இம்மாதிரியான கனவுகள் வருவது இயல்பு அதிகமாக பாம்புகள் கனவுகள் வருவதற்கு காரணம் இதுவே ஆகும்.
எனவே நீங்கள் ராகு கேது கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் மேலும் ராகு கேது பரிகாரங்களை நீங்கள் செய்தால் இம்மாதிரியான தோஷங்கள் விலகி பாம்புகள் அடிக்கடி கனவில் வருவதை விலக்கி விடலாம்.
நிறைய பாம்புகள் கனவில் வந்தால் இதே பலன்கள் தான் ராகு கேது பரிகாரம் செய்தால் நிறைய பாம்புகள் கனவில் வராது பாம்பு கனவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் உங்கள் ராகு கேது திசைகள் புக்திகள் நடைபெற போவதை உணர்த்துவதற்கு நிறைய பாம்பு சம்பந்தமான கனவுகள் ஏற்படுகிறது மேலும் நிறைய பாம்புகளும் கனவில் வருகிறது.
8.கருப்பு பாம்பு கனவில் வந்தால்
கருப்பு பாம்பு கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன்களை தரும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
கருப்பு பாம்பு உறிஞ்சி சென்று கொண்டிருப்பது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்கு தெரியப்போகிறது அல்லது முக்கியமான விஷயம் உங்கள் காதுகளுக்கு வந்து சேரும் என்பதை குறிக்கும்.
கருப்பு பாம்பு நீங்கள் கனவில் கண்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் உடல்நிலை போன்ற விஷயங்களில் கவனம் தேவை உடல் ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும் என்பதை குறிக்கும்.
9.சாரை பாம்பு கனவில் வந்தால்
சாரைப்பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவர் செய்யும் செயலில் கவனம் தேவை என்பதை உணர்த்தவே இம்மாதிரியான சாரைப்பாம்பு சம்பந்தமான கனவுகள் ஏற்படுகிறது.
10.கருநாகம் பாம்பு கனவில் வந்தால்
நீங்கள் உங்கள் கனவில் கரனாகப் பாம்பு தோன்றினால் நல்லது வந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு ஆபத்துக்கள் வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது என்பதை குறிப்பப்பதற்காகவே கருணாக பாம்பு கனவில் வருகிறது.
மேலும் உறவினர்கள் வண்டி வாகனம் முடிவுகள் போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.
11.பச்சைப் பாம்பு கனவில் வந்தால்
நல்ல பலன்கள்:
நீங்கள் உங்கள் கனவில் ஒரு பச்சை நிறத்தில் பாம்புகளை நீங்கள் பார்த்திருந்தால் அதிகமான வளர்ச்சிகள் உங்கள் வாழ்வில் ஏற்படும் மற்றும் உங்கள் இல்லத்தில் பெண்கள் கருவுறுதல் போன்ற சந்தோஷமான செய்திகள் ஏற்படும்.
தீய பலன்கள்:
கருத்தரிப்பு போன்றவை தாமதப்படுத்துதல் வறுமை மற்றும் தோல் விலை ஏற்படுத்தும்
12.சிவப்பு பாம்பு கனவில் வந்தால்
நீங்கள் உங்கள் கனவில் ஒரு சிவப்புக்கு வர்ண பாம்பை நீங்கள் கனவில் கண்டிருந்தால் நல்ல எண்ணங்கள் அதிகம் ஏற்படப் போவதை குறிக்கிறது மேலும் நம்பிக்கை தெய்வீக வழிபாடு குறிக்கும்.
13.குட்டிப் பாம்பு கனவில் வந்தால்
நீங்கள் உங்கள் கனவில் குட்டி பாம்பு கனவில் வருவது போன்ற கனவுகள் நீங்கள் கண்டிருந்தால் நீங்கள் உங்கள் முன் நிற்கும் ஆபத்தை உணராமல் பயணிக்கிறீர்கள் அல்லது நீங்கள் ஒரு விஷயத்தை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்பதை குறிக்கும் எனவே அனைத்து விஷயங்களிலும் சற்று பொறுமையாக செயல்பட வேண்டும் என்பதை உணர்த்த குட்டி பாம்பு உங்கள் கனவில் வருகிறது
14.மலை பாம்பு கனவில் வந்தால்
நீங்கள் கனவில் மலை பாம்பு அல்லது மிகப்பெரிய பாம்புகளை கனவில் கண்டிருந்தால் நீங்கள் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பதை குறிக்கிறது மேலும் இந்த பாம்புகள் சம்பந்தமாக கனவுகள் வந்தால் பயமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அருகில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வருவது மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.
15.ராஜ நாகம் கனவில் வந்தால்
ராஜநாகம் உங்கள் கனவில் வருவது போன்று நீங்கள் கனவுகளை கண்டிருந்தால் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் மேலும் வாழ்க்கையில் நன்மைகள் எது வந்தாலும் நீங்கள் போராடியே அதைப் பெறுவீர்கள் என்பதை உணர்த்த ராஜ நாகம் கனவில் வருகிறது.
16.பாம்பு காலில் ஏறினால் என்ன பலன்
கனவு காண்பவர் அவரின் கனவில் பாம்பு காலில் அல்லது கையில் ஏறுவது போல கனவு கண்டிருந்தால் அவருக்கு பதவி உயர்வு மற்றும் தன வரும் வாய் அதிகமாக கிடைக்கப் போகிறது என்பதை உணர்த்தவே பாம்பு காலில் ஏறுவது போன்ற கனவுகள் ஏற்படுகிறது.
17.ஐந்து தலை பாம்பு கனவில் வந்தால்
கனவுகள் ஐந்து தலை நாகப் பாம்பு கனவில் வந்திருப்பின் நீங்கள் ஐஷ்ட ஐஸ்வர்ய பலன்களை பெறப் போகிறீர்கள் தான வரவு திருப்தி தரும். என்பதை ஐந்து தலை பாம்பு கனவில் வந்து அறிவுறுத்தும்.
💥கனவில் பாம்பு வீட்டிற்குள் வந்தால் உங்கள் குடும்பத்தில் பல நன்மைகள் மற்றும் சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெறப் போகிறது என்று அர்த்தம்.
💥அதற்கு மாறாக நல்ல பாம்பு உங்கள் வீட்டில் உலாவது போல அதாவது சுற்றுத் தெரிவது போல கனவுகள் கண்டிருப்பேன் நீங்கள் கூடிய விரைவில் நோய்வாய் பட போகிறீர்கள் என்று அர்த்தம் எனவே உங்கள் உடல் நலத்தில் கவனம் தேவை.
💥இதுவே உங்கள் கனவில் பாம்பு வீட்டிற்குள் வந்துவிட்டது மேலும் அது வீட்டை விட்டு வெளியே செல்வது போல நீங்கள் கனவு கண்டிருந்தால் நீங்கள் குலதெய்வம் சம்பந்தமான விஷயங்களில் சற்று கவனம் மேலும் குலதெய்வ பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் ஏதேனும் வேண்டுதல் இருந்திருந்தால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு இம்மாதிரியான கனவுகள் வருகிறது.
💥பாம்பு நம் மீது ஏறி செல்வது போலவோ அல்லது நம் தலை மீது இருப்பது போன்றோ, கனவு நீங்கள் கண்டிருந்தால் உங்களுக்கு கூடிய விரைவில் அலுவலகம் அல்லது பணி இடத்தில் உன் பதவி உயர்வுகள் கிடைக்கப் போவதற்கு உண்டான அறிகுறி ஆகும்.
💥பாம்பு உங்களது வீட்டை விட்டு வெளியே செல்வது போல கனவு கண்டிருந்தால் நீங்கள் இதனால் வரை பட்டுக்கொண்டிருந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி புது இன்பம் மற்றும் சந்தோஷம் பிறக்கப் போகிறது என்பதை குறிக்கும் இந்த கனவு.
💥உங்கள் வீட்டிற்குள் பாம்பு வந்து ஒருவரை கடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் யாரோ ஒருவரிடம் கூடிய விரைவில் ஏமாற போகிறீர்கள் என்று அர்த்தம்.
💥வீட்டில் நல்ல பாம்பு எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்து இருப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.
பாம்பு கடித்து : இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால் அதிர்ஷ்டம் கூடிவரும்.