திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஜெயபுர என்னும் இடத்தில் இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி, கடந்த சனிக்கிழமை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பலாகாமம் பட்டிமேடு பகுதியை சேர்ந்த வரதராஜா பிரணவன் (வயது 24) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










