கத்தியால் குத்தி கொலை செய்து பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவம்
பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகல பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
கொலையை செய்த சந்தேக நபரான பெண் தனது கணவருடன் நாகல பிரதேசத்தில் கடையொன்றை நடத்தி வந்ததாகவும், உயிரிழந்தவர் நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த கடைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடையில் ஏற்பட்ட தகராறில், உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், சந்தேக நபர் அவரை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவரது உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாகல – பிபில பிரதேசத்தில் வசிக்கும் 66 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.