கதிர்காமம் ஆலயத்தின் பிரதான குரு குற்றத்தடுப்புப் பிரிவில் சரண்

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான குருவான சோமிபால ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார்.

அவரை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையின் நேர்த்திக்கடனுக்கான பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி ருஹுனு கதிர்காமம் மஹா ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண்கள் எடை கொண்ட தங்க வட்டு காணாமல் போனமை தொடர்பிலேயே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தந்தையை காணவில்லை என கடந்த நேற்று செவ்வாய்க்கிழமை அவரது மகள்களும் மற்றுமொரு குடும்பஸ்தரும் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தங்கள் தந்தை சமீபத்தில் தனது மூத்த சகோதரி ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்றும் மகள்கள் பொலிஸில் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

கதிர்காம ஆலய பிரதான பூசகர் மாயம்