
கணேமுல்ல சஞ்சீவ கொலை: பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு குற்றப்பிரிவு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.