
கடும் காற்றுடன் கூடிய மழையால் மரம் முறிந்து வீழ்ந்து வீடு சேதம்
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் நடுப்பிரப்பந்திடல் பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை மாலை பெய்த கன மழையுடன் கூடிய காற்றினால் குறித்த மரம் வீட்டின் மீது விழுந்ததில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வீட்டு உபகரணங்கள் உட்பட பல பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டு கூரையுடனான கட்டிடம் பகுதியளவில் உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்