
கடலோர ரயில் சேவை தாமதம்
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திர தேவி ரயில் பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக கடலோர மார்க்கத்தின் சில ரயில் சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.