கஞ்சா தோட்டம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு
இரத்தினபுரி – உடவளவ காப்புக்காடு பகுதியில் கஞ்சா பயிரிட்டிருந்த இடத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உடவளவ அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
உடவளவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த விசேட தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.
04 அடி உயரத்தில் நடப்பட்ட 2,153 சணல் செடிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.