
ஒரு மாணவனின் உணவை பகிர்ந்து உண்ட 8 மாணவர்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்
-பதுளை நிருபர்-
உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமுற்ற 8 மாணவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பல்லகெடுவ களப்பிட்டகந்த தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் உயர்தர வகுப்பு மாணவர்கள் தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை 8 மாணவர்கள் பகிர்ந்து உண்டுள்ளனர்.
இதன்போது, உணவு ஒவ்வாமையின் காரணமாக 8 மாணவர்களும் உடன் பல்லகெடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.