
மாத்தறை – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியின் கிவுல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த மூவர் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காரின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்திருந்தமையினால் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்க பிரதேசவாசிகள் மிகுந்த சிரமபட்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
