எரிபொருள் விலையை குறைக்க தீர்மானம்

உலக சந்தை விலைகளின்படி தற்போதைய போக்கு எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் மேலும் குறையும் என்பதைக் காட்டுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதி இரவு எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24