
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முறையான கட்டுப்பாட்டுடனும் நிர்வாகத்துடனும் பேணுமாறும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை உரிய திணைக்களங்களின் சரியான ஒருங்கிணைப்புடன் தீர்த்து வைக்குமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.