எரிபொருள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

30,000 மெற்றிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து இன்று புதன்கிழமை டீசல் தரையிறக்கப்பட உள்ளதாக, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 25 முதல் 26 ஆம் திகதிக்கு இடையில் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றும், 27 முதல் 29 ஆம் திகதிக்கு இடையில் 92 ஒக்டேன் ரக பெற்றோல் கப்பல் ஒன்றும், நாட்டை வந்தடைய உள்ளதாக, டுவிட்டர் பதிவு ஒன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், மண்ணெண்ணெய் மற்றும் விமான எண்ணெய் விநியோகம் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க