
உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் பலி
மலேசியாவில் 2 உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இராணுவத்திற்குச் சொந்தமான குறித்த 2 உலங்கு வானூர்திகளும் மலேசியாவின் அரச நிகழ்வு ஒன்றிற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த உலங்கு வானூர்திகளில் 10 பேர் பயணித்த நிலையில் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் லுமட் இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
