உலக வாழ் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி

உலக வாழ் இந்துக்கள் இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர்.

தமது அடியார்களான மக்களைக் காப்பதற்கு நரகாசூரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை உலகலாவிய ரீதியில் இந்துக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.

தீபாவளி திருநாளில் ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி, தீப ஒளியை பரவச் செய்து இந்துக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

தீபாவளிப் பண்டிகை தீமையின் வடிவமான அசுரர்களை கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானது என்கின்றன இந்து புராணங்கள்.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியன்மார், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இந்த பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.