உணவு வாங்குவதற்கு சென்ற சிறுமி மீது வாகனம் மோதியதில் சிறுமி பலி
-சிறுமி மீது வாகனம் மோதியதில் சிறுமி பலி-முல்லைத்தீவு – கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று புதன் கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
மகேஸ்வரன் நர்மதா (வயது – 8) என்கின்ற சிறுமியே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த சிறுமி உணவு வாங்குவதற்காக கடைக்கு சென்றபோது, வீதியால் பயணித்த கனரக வாகனம் மோதி காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
புத்தளம் பகுதியை சேர்ந்த வாகனத்தின் சாரதி கொக்கிளாய் பொலிஸாரபல் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.