-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் உயிரிழந்துள்ளார்.
அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த, மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், தாவடி பகுதியில் உள்ள கட்டடமொன்றின் 2வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த போது, தவறி 1வது மாடியில் விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.