இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டப்படுகின்றது தினேஷ் சாப்டரின் சடலம்

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது.

எனவே, இதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாளை மறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 8.30 அளவில் பொரளை மயானத்திற்கு வருகை தருமாறு விசேட வைத்திய நிபுணர் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களம் மனுவொன்றின் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அங்கு சடலத்தை மீள தோண்டுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தினேஷ் சாப்டரின் சடலம் காலி கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அதற்கு ஐவரடங்கிய விசேட வைத்திய குழு அனுமதித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் அங்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க