
அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்
நாட்டில் போதியளவு அரிசி இருப்பதனால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரசாயன உர இறக்குமதியை நிறுத்தியதால் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு இரசாயன உரங்களை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கடந்த நெல் பருவத்தில், நெல் அறுவடையும் வெகுவாக குறைந்ததால், சீனா, இந்தியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.