அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

70,000 மெட்ரிக் டன் அரிசி தொகையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அரிசி தொகையை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் ஊடாக இறக்குமதி செய்து சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.