
அன்னதான விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர் உயிரிழப்பு
கேகாலை – வரகாபொல பொலிஸ் பிரிவின் அத்னாவல பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்னாவல, வரகாபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
உயிர் இழந்தவர் தனது சகோதரரின் வீட்டில் நடைபெற்ற அன்னதான விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்ய வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.