அனர்த்தங்களினால், விவசாய அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான 1,160 சிறுகுளங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 747 சிறு குளங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம், வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள சிறு குளங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்த குளங்களுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை புனர் நிர்மாணம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பணிப்பாளர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதி ஒதுக்கீடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ், 15,958 குளங்கள் தற்போது பராமரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.