
அடையாளம் தெரியாத இரு நபர்களின் சடலங்கள் மீட்பு
-பதுளை நிருபர்-
பதுளை மஹியங்கனை வீதியில் இரண்டு இடங்களில் இருந்து அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஒருவரின் சடலம் 6 ம் கட்டை புஸ்ஸல்லாவ பகுதி வீதியில் பாலத்திற்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அச்சடலம் ஆண் ஒருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் ஒரு சடலம் அவ்விடத்தில் இருந்து 2 கிலோமீட்டருக்கு அப்பால் பதுளை மஹியங்கனை வீதியில் போவத்தை பதுளுஓய ஆற்று ஓரத்தில் உள்ள ஈரப்பலா மரம் காணப்படும் பகுதியில் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் ஆண் ஒருவரின் சடலமா அல்லது பெண்ணின் சடலமா என அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சடலம் தொடர்பில் பதுளை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட உள்ளதாக பதுளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.