
அகில இலங்கை மருத்துவ மக்கள் மேம்பாட்டு பேரவையினரின் முதலாவது மே தின ஒன்று கூடலானது இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அமைப்பின் தலைவர் கவிஞர் தமிழ்விந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மருத்துவ மக்களும் ஒப்பனையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து ‘ஒற்றுமையே எமது பலம் உறவுகளை ஒன்றிணைப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த மேதின நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், அரச அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஒப்பனையாளர் சங்கங்களின் தலைமைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட இணைப்பாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
