வைத்தியர் நோயாளியிடம் கடுமையாக நடந்து கொள்ளும் வைரல் வீடியோ!

பெண் வைத்தியர் ஒருவர், நோயாளியிடம் மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி மோசமாக நடந்து கொள்ளும் காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.<

எனினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற வைத்தியசாலை தொடர்பில் தகவல்கள் எதுவும் இன்னும் தெரியவரவில்லை

நோயாளிகளில் ஒருவர் தனது அறைக்குள் நுழைய முயன்றபோது, ​​குறித்த வைத்தியர் தனது குரலை உயர்த்தி சத்தமிடுவதை, காணொளியில் அவதானிக்க முடிகிறது.

அதில் அவர் “உங்களை உள்ளே அழைக்கும் வரை உள்ளே வர வேண்டாம், இல்லையெனில் நான் எந்த நோயாளிகளையும் பார்க்க மாட்டேன்” என்று கூறி நோயாளியை வெளியே விரட்டியடிப்பதை அவதானிக்க முடிகிறது.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

Minnal24 வானொலி