வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆய்வகங்களில் நடத்தப்படும் வழக்கமான பரிசோதனைகளை கட்டுப்படுத்துமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன், வைத்தியசாலையின் அனைத்து பிரதானிகளுக்கும் எழுத்துமூல அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பரிசோதனை கருவிகளின் பற்றாக்குறை காரணமாக, அத்தியாவசிய பரிசோதனைகள் தவிர வழக்கமான தினசரி பரிசோதனைகளை கட்டுப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மயக்க மருந்து இல்லாத காரணத்தினால் உயிருக்கு ஆபத்தான சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு வைத்தியசாலையில் உள்ள அனைத்து நிபுணர்களுக்கும் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா, பணிப்புரை விடுத்திருந்தார்.