வீதியை கடந்த பெண் மீது அம்பியூலன்ஸ் மோதி விபத்து

-பதுளை நிருபர்-

பதுளை- பசறை வீதியின் 5ஆம் கட்டைப் பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் மோதுண்ட பெண்ணொருவர், கடும் காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை  மணியளவில் பாடசாலைக்குச் செல்லும் தனது மகளை பஸ்ஸில் ஏற்றுவதற்காக, வீதியை கடந்த போது, மொனராகலையிலிருந்து பதுளைக்கு நோயாளி ஒருவருடன் பயணித்த அம்பியூலன்ஸ் வண்டியில் குறித்த பெண் மோதியுள்ளார்.

இதன் போது பதுளை- வேவெஸ்ஸ தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் படுகாயமடைந்துள்ளதுடன், அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்துக்குள்ளான பெண்ணின் நிலைமை மோசமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.