வீதியால் சென்ற நபரை கடுமையாக தாக்கும் கும்பல் (வீடியோ இணைப்பு)

குழுவாக சேர்ந்து சிலர் தனிநபர் ஒருவரை தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் டிசம்பர் 31 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி சாரதிகள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் வித்தை காட்டுவது போன்று முச்சக்கரவண்டிகளை செலுத்தியதால் அவ்விடத்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சலசலப்பின் போது ​​அவ்வழியாகச் மோட்டார் சைக்கிள் சென்ற ஒருவரைக் குழுவொன்று மறித்து கடுமையாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் குறித்த காணொளி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.