வீட்டின் கூரையில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

புலத்சிங்கள பகுதியில் வீட்டின் கூரையில் இருந்து ஒருவர் நிலத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

தெரணியகல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீடுடொன்றின் கூரையை சரிசெய்துகொண்டிருந்தபோது தவறி வீழ்ந்த நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.